மெஜந்தா படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர்
பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட்டின் *டாக்டர் ஜே பி லீலாராம், ராஜு கே, சரவணன் பி மற்றும் ரேகா லீலாராம்* ஆகியோர் தயாரிப்பில் , பரத் மோகன் இயக்கத்தில் , சாந்தனு பாக்யராஜ் மற்றும் அஞ்சலி நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் "மெஜந்தா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது .
மேலும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் ஆர்.ஜே. ஆனந்தி, பக்ஸ், அர்ச்சனா ரவிச்சந்திரன், ஷரத் ரவி, சௌந்தர்யா சரவணன், படவா கோபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தரண் குமார் இசை, பல்லு ஒளிப்பதிவு, பவித்ரன் படத்தொகுப்பு, பிரேம் கலை இயக்கம், குவோச்சாய் ஆடை வடிவமைப்பாளர் மற்றும் சக்தி சரவணன் சண்டை பயிற்சி , ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் இடம்பெற்றுள்ள இப்படம் அடுத்த ஆண்டு திரையரங்குகளில் வெளியாகும் !

No comments:
Note: Only a member of this blog may post a comment.