Facebook

test

February 27 2026 Tamil Theatrical Release Movies

 இந்த வாரம் 2026 பிப்ரவரி 27  திரையரங்குகளில் தமிழில் வெளியாகவுள்ள படங்கள் : 



1. தாய் கிழவி : 

நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் , நிவாஸ் கே.பிரசன்னா இசையில் , அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், நடிகை ராதிகா முதன்மை கதாபாத்திரத்திலும் , அவருடன் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு மற்றும் பலர் நடித்துள்ள படம் 'தாய் கிழவி' . கிராமத்து கதைக்களத்தில் ஒரு வயதான  தாய்க்கும் அவரது மகன்களுக்கும் இடையிலான சொத்துப் பிரச்சனையை காமெடி மற்றும் உணர்வுப்பூர்வமாக கலந்து உருவாகியுள்ள இப்படம் வரும் 2026 பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

2. ஆழி

 888 புரொடக்ஷன்ஸ் மற்றும் செல்லுலாய்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் , ஜாஸ்ஸி கிஃப்ட் இசையில் , மலையாள இயக்குநர் மாதவ் ரமா தாசன் இயக்கத்தில், சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்திலும் , அவருடன் தேவிகா சதீஷ், இந்திரஜித் ஜெகன், தாமரை செல்வி, வையாபுரி , ஸ்ரீஜித் ரவி மற்றும் பலர் நடித்துள்ள படம் "ஆழி",  கடலை மையமாகக் கொண்ட விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூடிய இப்படம் வரும் 2026 பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

3. போர்த் ப்ளோர் : 

மனோ கிரியேஷன் சார்பில் ஏ. ராஜா தயாரிப்பில் , தரண் இசையில் , எல்.ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில், ஆரி அர்ஜுனன், தீப்ஷிகா, பவித்ரா, இயக்குநர் சுப்ரமணிய சிவா, தலைவாசல் விஜய் , ஆதித்யா கதிர்  மற்றும் பலரது  நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் திரில்லர்  படமான "போர்த் ப்ளோர்"  வரும் 2026 பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

4. தெறி (ரீ ரிலீஸ்) 

கடந்த 2016 ஆம் ஆண்டு கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ,  விஜய், ஏமி ஜாக்சன், சமந்தா, ராதிகா சரத்குமார், பிரபு, மகேந்திரன் மற்றும் பலரது  நடிப்பில், ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் ,  அட்லீ இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'தெறி' திரைப்படம் மீண்டும் வரும் 2026 பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

5. ஏ படம் (டாக்டர் அம்பேத்கர் ரிட்டர்ன்ஸ்)


சட்டமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஏ படம் (டாக்டர் அம்பேத்கர் ரிட்டர்ன்ஸ்) , மாங்காடு அம்மன் மூவிஸ் சார்பில் ராஜகணபதி தயாரித்து நடித்துள்ளார். இப்படம் வரும் 2026 பிப்ரவரி 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.