இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பே மீதமுள்ளன - "மண்டாடி" பட அப்டேட் கொடுத்த நடிகர் சூரி :
எல்ரெட் குமார் தயாரிப்பில் , மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் , ஜி வி பிரகாஷ்குமார் இசையில் , சூரி கதையின் நாயகனாக "மண்டாடி" எனும் படத்தில் நடித்து வருகிறார், பரபரப்பாக நடைபெற்றுவரும் இப்படத்த்தின் படப்பிடிப்பை பற்றி புதிய தகவல்களை நடிகர் சூரி பகிர்ந்துள்ளார் , அவர் கூறியதாவது :
"மண்டாடி" படத்தின் படப்பிடிப்பு 90 நாட்கள் நிறைவடைந்துள்ளது, இதில் தொண்டியில் படமாக்கப்பட்ட கிளைமாக்ஸ் பகுதிகளும் அடங்கும். இன்னும் 30 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது, இது ஃப்ளாஷ்பேக் காட்சிகளை உள்ளடக்கியது.
'மண்டாடி' தலைப்பு ஒரு மீன்பிடி குழுவின் தலைவரைக் குறிக்கிறது, மேலும் இப்படத்தின் மையக்கத்தை தமிழ்நாட்டின் 100 கிலோமீட்டர் நீளமுள்ள கடற்கரைக்கு தனித்துவமான ஒரு பாரம்பரிய விளையாட்டையும் , ஹீரோவின் காதல், விடாமுயற்சி, மீட்பு மற்றும் வாழ்க்கையில் அவருக்கு கிடைக்கும் இரண்டாவது வாய்ப்பை சுற்றி வருகிறது , இயக்குனர் உணர்ச்சிகரமான மற்றும் ஒரு நேர்கோட்டு அல்லாத கதை அமைப்பை (Non Linear ) உருவாக்கியுள்ளார் என நடிகர் சூரி தெரிவித்துள்ளார் .

No comments:
Note: Only a member of this blog may post a comment.