Facebook

test

2026 February 13 and 14 Tamil Theatrical Release Movies

 இந்த வாரம் 2026 பிப்ரவரி 13 மற்றும் 14 தேதிகளில் திரையரங்குகளில் தமிழில் வெளியாகவுள்ள படங்கள் : 


வாரந்தோறும் கோலிவுட்டில் புதுப் படங்கள் வெளியாவது வழக்கம் , இந்தவாரம் காதலர் தினத்தை முன்னிட்டு புதுப்படங்களுடன் , பல ரீ ரிலீஸ் படங்களும் 2026 பிப்ரவரி 13 மற்றும் 14 தேதிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன, அவை .. :

2026 பிப்ரவரி 13 (வெள்ளிக்கிழமை )

மை லார்ட் : 


ராஜு முருகன் இயக்கத்தில் , ஷான் ரோல்​டன் இசையில் , சசிகுமார் , சைத்ரா ஆச்சார் , ஜெயப்​பிர​காஷ், குரு சோமசுந்​தரம், ஆஷா சரத், கோபி நயி​னார், வசுமித்ரா  மற்றும் பலர் நடித்துள்ள படம்  "மை லார்ட்" ,  இந்தக் கதை அதி​காரம் ஒரு எளிய, கடைக்​கோடி மனிதனின் கையில் கிடைத்​தால் அவன் அதை எப்​படிப் பயன்​படுத்​து​வான் என்பதை பற்றியது , மேலும் இப்படம்  உங்களை சிரிக்க, சிந்திக்க வைக்கிற படமாக இருக்கும் என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார் .

பூக்கி :

 விஜய் ஆண்டனி தயாரித்து , இசையமைத்துள்ள படம் "பூக்கி", இப்படத்தில் அஜய் திஷன், தனுஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் , இப்படம் இளைஞர்களை கவரும் காதல் கதைக்களத்தை மையமாகக் கொண்டது .

ஸ்வீட்டி கிரேசி நாட்டி : 


Arun Visualz கோவை ரமேஷ் தயாரிப்பில் , ஜி.ராஜசேகர் இயக்கத்தில் இனியா, த்ரிகுண், ஸ்ரீ ஜீத்தா கோஷ் மற்றும் பலர் நடித்துள்ள 'ஸ்வீட்டி நாட்டி கிரேஸி' படம் அடல்ட் ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் தமிழ் & தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ளது .

மைலாஞ்சி : 



அஜயன் பாலா இயக்கத்தில்,  இளையராஜா இசையில், ஸ்ரீராம் கார்த்திக் கிரிஷா குருப், சிங்கம்புலி , முனீஷ்காந்த், தங்கதுரை மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் "மைலாஞ்சி". இப்படம் மலைப் பிரதேசத்தைப் பின்னணியாகக் கொண்டு சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசுறவதுடன் ,  காதலும் கலந்த கதைக்களத்தில் உருவாகியுளளது .

 கா – தி ஃபாரஸ்ட் : 

ஜான் மேக்ஸ் தயாரிப்பில் , நாஞ்சில் நாகராஜன் இயக்கத்தில் , சுந்தர் சி பாபு இசையில் , ஆண்ட்ரியா, சலீம், மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ள படம் "கா – தி ஃபாரஸ்ட்". வைல்டுலைஃப் போட்டோகிராபர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா , வனப்பகுதியில் நடக்கும் மர்மமான கொலை பற்றிய விவரங்களை துப்பு துலக்கி , அதில் சிக்கியவரை மீட்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ளது , இத்திரைப்படம் . 

தெரிஞ்சா காதலிங்க :

 M.கஜேந்திரன் B.A தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் , புதுமுகங்களான கிரண் மற்றும் நந்தினி நடித்துள்ள படம் "தெரிஞ்சா காதலிங்க" , இப்படம் கிராமத்து பின்னணியில் உள்ள காதல் கதைக்களத்தை கொண்டுள்ளது .

உயிருள்ளவரை உஷா :

கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான உயிருள்ளவரை உஷா , இயக்குனர் , நடிகர் , இசையமைப்பாளர் என பன்முகத்திறமையை வெளிப்படுத்திய டி.ஆர் அவர்களின் காதல் மற்றும் அதிரடி கலந்த திரைப்படம் , இப்படம் வரும் 2026 பிப்ரவரி 13 அன்று ரீ ரிலீஸாகவுள்ளது .

மௌனம் பேசியதே :


கடந்த 2002 ஆம் ஆண்டு , அமீரின் இயக்கத்தில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் , சூர்யா , த்ரிஷா , லைலா மற்றும் பலர் நடித்துவெளிவந்து இளைஞர்களை கவர்ந்த  படம் மௌனம் பேசியதே , இப்படம் வரும் 2026 பிப்ரவரி 13 அன்று ரீ ரிலீஸாகவுள்ளது .

மின்னலே :

கௌதம் மேனன் இயக்கத்தில் , ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் , மாதவன் , ரீமாசென் , விவேக் மற்றும் பலர் நடித்து,  கடந்த 2001 ஆம் ஆண்டு வெளிவந்து இளைனர்களை கொள்ளைகொண்ட மின்னலே திரைப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி , வரும் 2026 பிப்ரவரி 13 அன்று ரீ ரிலீஸாகவுள்ளது .

2026 பிப்ரவரி 14 (சனிக்கிழமை )

சீதா பயணம் : 


ஸ்ரீராம் பிலிம்ஸ் தயாரிப்பில் , நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் ,  நிரஞ்​சன்,  ஐஸ்​வர்யா அர்​ஜுன் , சத்​ய​ராஜ், பிர​காஷ் ராஜ்  மற்றும் பலர் நடித்துள்ள படம் "சீதா பயணம் ". காதலை மையாமாகக் கொண்ட இப்படம்  தமிழ், தெலுங்​கு, கன்னட மொழிகளில் உரு​வாகி​யுள்ளது.

காதலர் தினம் :

கடந்த  1999 ஆம் ஆண்டு , கதிர் இயக்கத்தில் , ஏ . ஆர் . ரஹ்மான் இசையில் , வெளிவந்த  "காதலர் தினம்" படம் ,  இந்த பிப்ரவரி 14, 2026 காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீசாகவுள்ளது.

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.