மீண்டும் இணையும் விஷால் - சுந்தர் சி கூட்டணி !
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள , ஆக்ஷன், மத கத ராஜா படங்களை தொடர்ந்து , மீண்டும் ஓர் புதிய படத்தில் இருவரும் இணைகிறார்கள் , இதனை விஷாலின் தயாரிப்பு நிறுவனம் (VFF) உறுதி செய்துள்ளது !
தற்போது நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தினை இயக்கி வரும் சுந்தர்.சி , இதன் படப்பிடிப்பு முடிவடைந்ததும் , விஷால் நடிக்கும் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் , மேலும் இப்படத்திற்காக வரும் நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி , 2026 கோடை விடுமுறையில் படத்தினை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.
‘மூக்குத்தி அம்மன் 2’, விஷால் படத்தினை முடித்து விட்டு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் சுந்தர்.சி, இதற்கான வேலைகளும் நடைபெற்று வருகிறது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.