மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி… வெளியானது ‘ட்ரெயின்’ டிரெய்லர்!
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள ‘ட்ரெயின்’ திரைப்படத்தின் டிரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் ஸ்ருதிஹாசன், நாசர், கலையரசன், நரேன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முழுத் திரைப்படமும் ஒரே நாள் நடைபெறும் ரயில் பயணத்தை மையமாகக் கொண்டு விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் டிசம்பர் 4, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நீண்ட நாட்களாக ‘ட்ரெயின்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருந்த விஜய் சேதுபதி மற்றும் மிஷ்கின் ரசிகர்களுக்கு, தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரும், டிசம்பர் 4 வெளியீட்டுத் தேதியும் இரட்டிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது!

No comments:
Note: Only a member of this blog may post a comment.