Facebook

test

Moon Walk Movie Trailer | Tamil

பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியின் ‘மூன் வாக்’ டிரெய்லர் வெளியானது!


மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கத்தில், பிரபுதேவா, யோகிபாபு, அர்ஜுன் அசோகன், அஜு வர்கீஸ், சதீஷ், ரெடின் கிங்ஸ்லி, ராஜேந்திரன், லொள்ளு சபா சுவாமிநாதன் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ள ‘மூன் வாக்’ திரைப்படத்தின் டிரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் இசையமைப்பதுடன், முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

‘மின்சார கனவு’ திரைப்படத்திற்குப் பிறகு சுமார் 30 ஆண்டுகள் கழித்து பிரபுதேவா – ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது!



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.