Facebook

test

Action King Arjun 175 Movie

 ஆபரேஷன் சிந்தூர் – அதிரடி ஆக்‌ஷனில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்!


ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் அவரது 175-வது திரைப்படத்தின் பூஜை அயோத்தியில் கோலாகலமாக நடைபெற்றது.

2025 ஏப்ரல் 22-ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, 2025 மே 7-ஆம் தேதி இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் துல்லியமான ராணுவ நடவடிக்கையின் பின்னணியில், தேசப்பற்று, அதிரடி மற்றும் வீரம் நிறைந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகவுள்ளது.

ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில், பிரசிடென்ஷியல் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் அனுப் மோகன் தயாரிக்க ,  தயாரிக்க  , ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி மேஜர் விஜய் பார்கவ் கதையை எழுதியுள்ளார் .









No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.