எதிர்பார்ப்பை எகிற வைத்த ‘மண்டாடி’ ட்ரெய்லர் :
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில், எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மண்டாடி’.
இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க, அவருடன் சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் செப்டம்பர் 10, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
கடலோர மக்களின் வாழ்க்கை, அவர்களின் பாரம்பரியம், உணர்வுகள் மற்றும் அவர்கள் உயிராக நேசிக்கும் ஒரு பாரம்பரிய விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர், ஆக்ஷன், உணர்வு மற்றும் பிரம்மாண்ட காட்சிகளுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கடலோர மக்களின் வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்யும் வகையில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ ட்ரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.