Facebook

test

City of Gold Tamil Movie

 விக்ரம் பிரபுவின் 26 வது படமான "சிட்டி ஆஃப் கோல்ட்"  ஃபர்ஸ்ட் லுக் & கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது :


ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கத்தில், விக்ரம் பிரபு நடிக்கும் 26வது படத்திற்கு
“சிட்டி ஆஃப் கோல்ட்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் மூலம் இன்ஸ்டாகிராம் பிரபலமான அமலா ஷாஜி நடிகையாக அறிமுகமாகிறார். மேலும், நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கோவை நகரை மையமாகக் கொண்டு, தங்கக் கடத்தல் மற்றும் குற்றப் பின்னணியைச் சுற்றி பரபரப்பான கதைக்களத்தில் உருவாகி வருகிறது “சிட்டி ஆஃப் கோல்ட்”.

தங்கத்தின் பின்னால் இயங்கும் இருண்ட உலகத்தையும், அதன் பின்னணியில் இருக்கும் குற்றச் செயல்களையும் மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், படக்குழு “சிட்டி ஆஃப் கோல்ட்” படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

 சிட்டி ஆஃப் கோல்ட் கிளிம்ப்ஸ் வீடியோ :


 சிட்டி ஆஃப் கோல்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள்  :




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.