2 மில்லியன் பார்வைகளை கடந்த ‘சர்தார் 2’ ட்ரெய்லர் :
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையில் உருவாகியுள்ள "சர்தார் 2" படத்தில் கார்த்தி, எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
உளவு உலகத்தின் இரகசியங்களையும், அதிரடி திருப்பங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சர்தார் 2 ஸ்பை த்ரில்லர் திரைப்படம், வரும் 2026 செப்டம்பர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், படக்குழு வெளியிட்டுள்ள ‘சர்தார்’ ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான குறுகிய காலத்திலேயே 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்து, ட்ரெய்லர் புதிய சாதனை படைத்து வருகிறது.
ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள பரபரப்பான காட்சிகள், மர்மம் நிறைந்த திருப்பங்கள் மற்றும் கார்த்தியின் மாறுபட்ட தோற்றங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளன.
சர்தார் 2 ட்ரெய்லர் :

No comments:
Note: Only a member of this blog may post a comment.