ராமராக ரன்பீர்... சீதையாக சாய் பல்லவி... இராவணனாக யாஷ் – 'ராமாயணா' ட்ரெய்லர் வெளியாகியது!
இந்திய சினிமாவின் மிகப் பிரம்மாண்டமான காவியப் படைப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெய்லர், இன்று ஜூலை 30, 2026, அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
பிரபல இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த காவியத்தில், ரன்பீர் கபூர் பகவான் ராமராக, சாய் பல்லவி அன்னை சீதையாக, யாஷ் வலிமைமிக்க இராவணனாக தோன்றி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளனர். ட்ரெய்லரின் ஒவ்வொரு காட்சியும் பிரம்மாண்டமான காட்சியமைப்பு, அசரடிக்கும் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்களால், இது இந்திய சினிமாவின் புதிய மைல்கல்லாக அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காவியத்திற்கு இசை உலகின் இரு ஜாம்பவான்களான இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
மிகப்பெரிய பொருட்செலவில், உலகத் தரத்தில், இரண்டு பாகங்களாக உருவாகி வரும் 'ராமாயணா' திரைப்படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளியிலும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளியிலும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'ராமாயணா' தமிழ் ட்ரெய்லர் :
No comments:
Note: Only a member of this blog may post a comment.