Facebook

test

Niram Tamil Movie Trailer

முகேன் ராவ், பிரீத்தி அஸ்ரானி நடிப்பில் மெடிக்கல் கிரைம் த்ரில்லர் 'நிறம்' ட்ரெய்லர் வெளியீடு!

முகேன் ராவ், பிரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், நிதின் சத்யா, சுரேகா வாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ள "நிறம்" திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மருத்துவப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த மெடிக்கல் கிரைம் த்ரில்லர், ஹைப்பர் லிங்க் ஆந்தாலஜி கதைக்களத்துடன் விறுவிறுப்பும், மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கவுள்ளது.

டி. இமான் இசையமைத்துள்ள இப்படத்தை, வி.எஃப்.எக்ஸ் இயக்குநராக அறியப்படும் பலராம் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார்.

K Square Cinemas சார்பில் கே. பிந்து மாதவி மற்றும் பி. ராஜேஷ் இணைந்து தயாரித்துள்ள "நிறம்", பல கதைகளின் புதிர்களை ஒரே புள்ளியில் இணைக்கும் வித்தியாசமான திரையனுபவமாக உருவாகியுள்ளது.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.