Facebook

test

I'm Game Movie Tamil Trailer

காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி... மாஸாக வெளியான துல்கர் சல்மானின் 'அயம்  கேம்' ட்ரெய்லர்! ; 

 நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்துள்ள 'அயம் கேம்' (I'm Game) திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ளது.

முன்னதாக, கடந்த ஜூலை 28-ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் வெளியீடு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்த நிலையில், இன்று ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக கவனம் பெற்று வருகிறது.

ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து நடிகர் துல்கர் சல்மான், "அனைத்து வகையான பொறுமைக்கும், தொடர்ந்து அளித்த ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி" என்று ரசிகர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் துல்கர் சல்மானுடன் சம்யுக்தா விஸ்வநாதன், மிஷ்கின், காயடு லோஹர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படம், ஆக்ஷன், த்ரில்லர் அம்சங்களுடன் உருவாகியுள்ளது.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் 'அயம் கேம்', ஓணம் பண்டிகையை முன்னிட்டு 2026 ஆகஸ்ட் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

'அயம் கேம்' (I'm Game)  தமிழ் ட்ரெய்லர் :



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.