நடிகராக லோகேஷ் கனகராஜ்... 'DC' ட்ரெய்லர் வெளியானது!
'சாணி காயிதம்', 'கேப்டன் மில்லர்' ஆகிய படங்களின் மூலம் தனித்துவமான இயக்குநராக முத்திரை பதித்த அருண் மாதேஸ்வரன், அடுத்ததாக இயக்கியுள்ள "DC" திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தப் படத்தில் பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
அதிரடி, ஆக்ஷன் மற்றும் பரபரப்பான காட்சிகளால் உருவாகியுள்ள "DC" திரைப்படம், வரும் 2026 ஆகஸ்ட் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.