Facebook

test

Yen Ennai Edho Seidhai Movie Teaser| Tamil

"டி. அந்தோணி இயக்கி நடித்துள்ள  'ஏன் என்னை ஏதோ செய்தாய்' டீசர் வெளியானது!" 

இயக்குநர் டி. அந்தோணி இயக்கி, நாயகனாகவும் நடித்துள்ள "ஏன் என்னை ஏதோ செய்தாய்" திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மென்மையான காதலையும், உணர்வுப்பூர்வமான தருணங்களையும் மையமாகக் கொண்ட இந்த படத்தில் மதுமிதா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜீவா ரவி, ரெஜின் ரோஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஜோய் ரெடா ஜெய்கர் ஹரிநாத் இசையமைத்துள்ள இப்படம், காதலின் ஆழத்தையும் வாழ்க்கையின் உணர்வுகளையும் திரையில் அழகாகப் பதிவு செய்யவுள்ளதாக ட்ரெய்லர் உணர்த்துகிறது.

"ஏன் என்னை ஏதோ செய்தாய்" திரைப்படம் வரும் 2026 ஆகஸ்ட் 21-ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.