Facebook

test

Sardar 2 Movie Tamil Teaser

கார்த்தி vs எஸ்.ஜே. சூர்யா... தீப்பொறி பறக்கும் "சர்தார் 2" டீசர்!

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சாம் சி.எஸ் இசையில் , இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் "சர்தார் 2" திரைப்படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆக்ஷன், மர்மம், உளவுத்துறை பின்னணியுடன் உருவாகியுள்ள இந்த டீசர், முதல் நொடியிலிருந்தே படத்தின் விறுவிறுப்பான கதைக்களத்தை  உணர வைக்கிறது.

இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக மோத, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  மேலும் "சர்தார் 2" திரைப்படம் வரும்  2026-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 "சர்தார் 2" டீசர் :



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.