நெட்பிளிக்ஸ் நேரடியாக வெளியாகும் இளனின் ‘பியார் பிரேமா கல்யாணம்’ :
‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ ஆகிய வெற்றிப்படங்களை இயக்கிய இளன், அடுத்ததாக ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தை எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்.
இந்தப் படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில், மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படம் வரும் 2026 ஆகஸ்ட் 21-ஆம் தேதி தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் கதாநாயகன் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
No comments:
Note: Only a member of this blog may post a comment.