'ட்ரோன்ஸ்' மூலம் ஹீரோவாகும் 'பரிதாபங்கள்' டிராவிட் செல்வம்!
'பன் பட்டர் ஜாம்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராகவ் மிர்தாத் இடானி, அடுத்ததாக புதுமையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் கதைக்களத்துடன் 'ட்ரோன்ஸ்' என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில், பிரபல யூடியூப் சேனலான 'பரிதாபங்கள்' மூலம் ரசிகர்களிடையே பிரபலமான டிராவிட் செல்வம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருடன் சித்தி இடானி, அஞ்சலி நாயர், குரேஷி , தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும், படத்தின் இசை டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.