இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், அவரது நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவான 'ஜனநாயகன்', திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையதளங்களில் கசிந்ததால் படக்குழுவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சென்சார் தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு தடைகளைத் தாண்டி, கடந்த மாதம் 2026 ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியானது.
'ஜனநாயகன்', தளபதி விஜயின் திரைப்பயணத்தின் கடைசி படமாகவும், தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வெளியாகும் அவரது முதல் படமாகவும் அமைந்ததால், ரசிகர்கள் அதனை திருவிழாவைப் போல கொண்டாடினர். உலகம் முழுவதும் பிரம்மாண்டமான வரவேற்பைப் பெற்ற இப்படம், முதல் நாளிலேயே ₹80 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம், தற்போது ₹300 கோடி வசூலை நெருங்கி பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டி வருகிறது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.