“அடுத்த பட கதை மற்றும் துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் பின்னணிகுறித்து மனம் திறந்த இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்”:
துருவநட்சத்திரம் படம் வெளிவரும் வரை நான் அடுத்த படத்தை இயக்க போவதில்லை என்று அறிவித்து இருந்த இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் அடுத்ததாக இளம் நடிகர்களை வைத்து ஓர் காதல் கதையை இயக்கப் போவதாகவும் மேலும் துருவ நட்சத்திரம் படம் பற்றியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் , அதன் முழு விபரம் பின் வருமாறு ,
"என்னுடைய அடுத்த படத்திற்கு ஒரு காதல் கதை தயாராக உள்ளது. பெரிய ஹீரோக்கள் யாரும் இப்போது காதல் கதை செய்யத் தயாராக இல்லை. அதனால் நான் இளம் நடிகர்களைத் தேடிக்கொண்டிருக்கிறேன், அதில் ஒரு புதிய நடிகரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளேன். எனது இயக்கத்தில் சிலம்பரசன் நதிகளிலே நீராடும் சூரியன் எனும் படத்தில் நடிக்க திறமிடப்பட்டது, ஆனால் அந்த கதையில் எந்த ஆக்ஷனும் இல்லாததால் அது கைவிடப்பட்டது, அதனால் நாங்கள் வெந்து தணிந்தது காடு படத்தில் இணைந்தோம் .
இப்போது நான் எழுதும் காதல் கதை, இது இரண்டு பேருக்கு இடையிலான ஒரு தூய நாடகம். பலர் GEN - z காதல் வேறு என்று கூறுகிறார்கள், ஆனால் இப்போது காதல் மொழி மாறவில்லை என்று நினைக்கிறேன்."
2018 ஆண்டு துவக்கத்தில் துருவ நடச்சத்திரம் படத்தை ஒரு யுனிவர்ஸ் கான்செப்ட்டில் எடுக்க கற்பனை செய்து இருந்தேன் , ஆனால் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்க எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்தது.
துருவநட்சத்திரம் படத்திற்கான வெளியீட்டை முன்னெடுக்க யாரும் முன்வரவில்லை, அதனால் நான் படங்களில் நடிக்கத் தேர்ந்தெடுத்தேன். எனது நிதிப் பிரச்சினைகளைச் சமாளிக்க லியோ படம் பெரிதும் உதவியது , இப்போது, DN சென்சார் செயல்முறை எனது பெயரில் முடிக்கப்பட்டுள்ளது. ஒரு சிறிய பிரச்சினை மட்டுமே உள்ளது, அது ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும், படம் விரைவில் வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் .

No comments:
Note: Only a member of this blog may post a comment.