ஜனநாயகன் மோதல் முதல் சென்சார் சர்ச்சை வரை பராசக்தி– தயாரிப்பாளர் என்ன சொல்கிறார்? :
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் 2026 ஜனவரி 9 ஆம் தேதியும் , சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படம் முதலில் ஜனவரி 14 ரிலீஸ் அறிவிக்கப்பட்டு , தற்போது நான்கு நாட்கள் முன்னதாக ஜனவரி 10 ஆம் தேதியே திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் , சமூக வலைத்தளங்களில் இரு தரப்பு ரசிகர்கள் இடையில் காரசாரமான விவாதம் போய்க்கொண்டிருக்கிறது, மேலும் இந்தி எதிர்ப்பை மையமாக கதைக்களத்தை கொண்ட "பராசக்தி" படம் சென்சாரில் பல காட்சிகளை கட் பண்ண சென்சார் குழு அறிவுறுத்தியுள்ளது , இதனால் படக்குழு ரிவைசிங் கமிட்டிக்குச் சென்றுள்ளது .
இதைப்பற்றி "பராசக்தி: படத்தின் தயாரிப்பாளர் கூறியதாவது !
"பராசக்தி படத்தின் சென்சார் பிரச்சனைகள் இருந்ததால், நாங்கள் ரிவைசிங் கமிட்டிக்குச் சென்றோம், படத்தின் தொடக்கத்திலிருந்தே, பலர் இந்த விஷயத்தைத் தொடக்கூடாது என்று எதிர்த்தனர். ஆனால் இந்த விஷயம் பார்வையாளர்களைச் சென்றடைய வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சுதந்திரத்திற்குப் பிறகு வந்த இந்த இயக்கத்தை யாரும் பேசவில்லை, நாங்கள் முதல் முறையாக இதைப் பற்றி பேசுகிறோம்.
ஜன நாயகன் முதலில் தீபாவளிக்கு திட்டமிடப்பட்டது, ஆனால் சில போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் காரணமாக அது தாமதமானது பராசக்தி படம் ஆரம்பிக்கும் போதே பொங்கல் வெளியீடு என முடிவு செய்யப்பட்டது .
மேலும் தியேட்டர் உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் , 4 நாட்களுக்கு முன்பே பராசக்தி படத்தை வெளியிட பரிந்துரைத்தனர். ஏனென்றால் அப்போது தான் இரு படங்களுக்கும் சரியாக திரையரங்குகள் ஒதுக்க முடியும் என தெரிவித்தனர் , முன்பெல்லாம் பொங்கல் விடுமுறைக்கு பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகும் , இப்பொது இரண்டு படங்கள் தானே வெளியாக போகிறது அதனால் ஏதும் பாதிப்பு ஏற்படாது, 2 படங்களை எளிதாக வெளியிட முடியும்". ஆனால் சமூக ஊடகங்களில், அவர்கள் தேவையற்ற சர்ச்சைகளையும் மோதல்களையும் பரப்புகிறார்கள் என பராசத்தி தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் .

No comments:
Note: Only a member of this blog may post a comment.