இந்த வாரம் டிசம்பர் 5, 2025 ஓ டி டி தளங்களில் தமிழ் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள் ஓர் பார்வை :
‘குற்றம் புரிந்தவன்: தி கில்டி ஒன்’ :
சோனி லிவ் ஓடிடி தளத்தில் விதார்த் , பசுபதி, லட்சுமி பிரியா மற்றும் பலர் நடித்துள்ள ‘குற்றம் புரிந்தவன்: தி கில்டி ஒன்’ எனும் தொடர் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது .மெர்சி என்கிற 14 வயதுச் சிறுமி காணாமல் போனதால், அச்சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரர் மீது காவல் துறை சந்தேகப்படுகிறது .அந்தச் சிறுமிக்கு என்ன நடந்தது , அவள் உயிருடன் இருக்கிறாளா என்பதை நோக்கித் தொடர் விரியும் என இயக்குனர் செல்வமணி தெரிவித்துள்ளார் .
தி கேர்ள் பிரண்ட் :
ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் , ராஷ்மிகா மந்தனா, தீக்சித் ஷெட்டி, அனு இம்மானுவேல், ராவ் ரமேஷ், ரோகிணி மற்றும் ராகுல் ரவீந்திரன் மற்றும் பலர் நடித்து கடந்த 7ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் , வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது .
டைஸ் ஐரே :
ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'டைஸ் ஐரே' படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மலையாளம் , தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது .
தூல்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் :
அஷ்வின் குமார் நடித்துள்ள "தூல்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்" தொடர் வரும் 2025 டிசம்பர் 5ஆம் தேதி ஆஹா தமிழ் தளத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது .
ஸ்டீபன் :
உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்' வரும் டிசம்பர் 5 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது .
%20OTT%20Release%20Tamil.png)





No comments:
Note: Only a member of this blog may post a comment.