Facebook

test

Actor Ashwin kumar Addresses Controversy

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கவில்லை நடிகர் அஸ்வின் : 


சின்னத்திரை, ஆல்பம் பாடல், ரியாலிட்டி ஷோ என பலவற்றில் சிறந்து விளங்கி பிறகு  வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் அஸ்வின் குமார். அவர் நடித்த "என்ன சொல்லப்போகிறாய்" படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கதை பிடிக்கவில்லை என்றால் தூங்கிவிடுவேன் என அவர் பேசிய விஷயத்தை கேட்டு பலரும் அவருக்கு எதிராக விமர்சனத்தை முன்வைத்தனர் , சமூக வலைத்தளங்களில் பாரபட்சமின்றி அவரை கலாய்த்து மீம்ஸ்கள் வலம் வந்தன ,  அதை அவரை சமாளிக்க  முடியாமல் திணறினார். அதிலிருந்து மீண்டு செம்பு எனும் படத்தில் நடித்தார் , தற்போது  அவர் நடித்துள்ள 'தூள் பேட்டை போலீஸ் ஸ்டேஷன்'. எனும் வெப் தொடர் ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அஸ்வின் குமார்  தனியார் யூடியூப் சேனலுக்கு கொடுத்திருக்கும் பேட்டியில், தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுவத்தை பற்றி உருக்கமாக பகிர்ந்துள்ளார் .

நான் எந்தத் தவறும் செய்யவில்லை. யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கவில்லை, ஆனால் அந்த சம்பவத்திற்குப் பிறகு (மேடைப் பேச்சு) பலர் என்னைப் பற்றி மிக மோசமாக எழுதினார்கள். மனிதநேயம் இல்லை என்று உணர்ந்தேன். அது இன்னும் என்னை வேட்டையாடுகிறது, அந்த வலி என்றென்றும் என்னுடன் இருக்கும்.

ஊடகங்களில் இருந்து வந்த சில நெருங்கிய நண்பர்கள் கூட என்னைப் பற்றி எதிர்மறையாக எழுதினர். நான் அவர்களை நம்பினேன், அது இப்போது வலிக்கிறது.

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.