Facebook

test

November 21 2025 Tamil Theatrical Release Movies

 நாளை (21-11-2025)  திரையரங்குகளில் தமிழில் வெளியாகவுள்ள படங்கள் :



மாஸ்க் :



கதை :  இது ஒரு டார்க்-காமிடி ஆக்ஷன்  த்ரில்லர்

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள "மாஸ்க்"  படத்தில் அறிமுக இயக்குனர் விகர்னன் அசோக் இயக்கியுள்ளார். கவின் , ஆண்ட்ரியா,  ருஹானி சர்மா, சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா, சந்தோஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர், ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மிடில் கிளாஸ் :



கதை :  நடுத்தர குடும்பங்களின் இன்னல்களை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள கதை .

தேவ் மற்றும் கே.வி.துரை இணைந்து இணைந்து தயாரித்துள்ள "மிடில் கிளாஸ்" படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார் ,  முனீஸ்காந்த் , விஜயலக்ஷ்மி , காளி வெங்கட், ராதா ரவி, குரேஷி, மாளவிகா அவினாஷ், கோடங்கி வடிவேலு மற்றும் வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர் .

தீயவர் குலை நடுங்க : 



கதை :  ஓர் உண்மை சம்பவத்தை பேசும் அதிரடி ஆக்ஷன் திரில்லர் கதை 

 ஜி.ஆர். ஆர்ட்ஸ் நிறுவனமும் சன் மூன் யுனிவர்சல் பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து  தயாரித்துள்ள "தீயவர் குலை நடுங்க"  படத்தை கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கியுள்ளார் ,  அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் , பிரகாஷ் ராஜ் , ஜிகே ரெட்டி, லோகு, பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர் . பரத் ஆசிவகன் இசையமைத்துள்ளார்.

யெல்லோ : 



கதை :  சென்னையில் இருந்து கேரளாவுக்கு பயணம் செய்யும் ஹீரோயினின் 8 நாள் வாழ்க்கையை விவரிக்கும் ஓர் உணர்ச்சிகரமான பயணக் கதை .

கோவை பிலிம் ஃபேக்டரி சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரித்துள்ள "யெல்லோ "  படத்தை ஹரி மகாதேவன்  இயக்கியுள்ளார் ,  பூர்ணிமா ரவி, வைபவ் முருகேசன், டெல்லி கணேஷ், சாய் பிரசன்னா, லீலா சாம்சன், வினோதினி வைத்தியநாதன், பிரபு சாலமன், நமீதா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர் . ஆனந்த் காசிநாத்  இசையமைத்துள்ளார்.

இரவின் விழிகள் : 



கதை :  உளவியல் த்ரில்லர் 

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரா தயாரித்துள்ள "இரவின் விழிகள்"  படத்தை சிக்கல் ராஜேஷ் இயக்கியுள்ளார் . தயாரிப்பாளர் மகேந்திரா படத்தின்  நாயகனாகவும் நடித்துள்ளார் 

சிசு: ரோட் டு ரிவெஞ்ச் : 



கதை : ஒரு கடுமையான போர் வீரர், தன் குடும்பத்தைக் கொன்ற எதிரியைத் தேடிச் செல்லும்,  அதிரடி சண்டைக் காட்சிகளால் நிறைந்த , ஓர் சாகச பயணக் கதை .

ஜல்மாரி ஹெலாண்டர்  இயக்கத்தில் , சிசு: ரோட் டு ரிவெஞ்ச் படத்தில் மார்மி டாமில்லா, ஸ்டீபன் லேங், ரிச்சர்ட் ப்ரேக் மற்றும் பலர் நடித்துள்ளனர் .

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.