'மாண்புமிகு பறை' படத்தின் டீசர் :
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுபா & சுரேஷ் ராம் திரைக்கதையில் , தேனிசை தென்றல் தேவா இசையில் , அறிமுக இயக்குநர் எஸ். விஜய் சுகுமார் இயக்கத்தில், திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார், காயத்ரி ரெமா, கஜராஜ், சேரன்ராஜ், ரமா, அசோக்ராஜா, காதல் சுகுமார், ஜெயக்குமார், முத்தம்மா, ஆரியன், தர்மராஜ், நந்தகுமார், சரவணன் மற்றும் பலர் நடித்துள்ள 'மாண்புமிகு பறை' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது .
பறை இசைக்கருவி , மக்களின் வாழ்வியலுடன் எப்படி பிணைந்துள்ளது என்பதை பற்றிய இப்படம் , கடந்த மே 2025ல் உலகின் தலைசிறந்த திரைப்பட விழாக்களில் ஒன்றான கேன்ஸ் திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பு மற்றும் பாராட்டைப் பெற்றது, மேலும் தமிழகத்தில் சிறந்த சமூக நீதிக்கான திரைப்பட பிரிவு மற்றும் இத்தாலியில் நடைபெற்ற கலாச்சார பாரம்பரியம் பிரிவில் விருதை பெற்றுள்ளது.
'மாண்புமிகு பறை' படம் திரையரங்குகளில் வரும் 2025 டிசம்பர் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.