"ரூட்" படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த கவுதம் கார்த்திக் :
'நாளைய இயக்குநர் சீசன் 1' மூலம் கவனத்தை ஈர்த்த சூரியபிரதாப் இயக்கத்தில், கவுதம் கார்த்திக் 'ரூட்' எனும் படத்தில் நடித்து வருகிறார் , கிரைம் திரில்லராக இப்படத்தில் நாயகியாக பவ்யா திரிகா மற்றும் பாலிவுட் பிரபல நடிகர் அபார்ஷக்தி குரானா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் .
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிவடைந்த நிலையில் , தற்போது படத்தின் பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக படத்தின் நாயகன் கவுதம் கார்த்திக் தனது டப்பிங் பணியை நிறைவு செய்துள்ளார் , இதனால் 'ரூட்' படத்தை பற்றிய அடுத்தக்கட்ட அறிவிப்புகளான பர்ஸ்ட் லுக், டீசர் ,ட்ரைலர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

No comments:
Note: Only a member of this blog may post a comment.