அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் விமல் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!
மலையாளத் திரையுலகில் “ககனச்சாரி, பொன்மேன்” வெற்றிப்படங்களைத் தயாரித்துள்ள அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் ப்ரொடெக்ஷன் பிரைவேட் லிமிடட் நிறுவன தயாரிப்பில் , அறிமுக இரட்டை இயக்குநர்கள் எல்சன் எல்தோஸ் மற்றும் மனிஷ் கே தோப்பில் இயக்கத்தில், விமல் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!
மேலும் இப்படத்தில் , கதாநாயகியாக முல்லை அரசி நடிக்க, ‘விடுதலை’ சேத்தன், ‘பருத்திவீரன்’ சரவணன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கவுள்ளார்கள்.
எழுத்தாளர் பாசில் ஜார்ஜ் மற்றும் ஆகாஷ் வி பால் ஆகியோர் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார்கள். திரைக்கதையை சுதி கிருஷ்ணா அமைத்துள்ளார். பார்க்கிங் வெற்றிப்பட ஒளிப்பதிவாளர் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரான்சிஸ் நெல்சன் சேவியர் மற்றும் மருது பெரியசாமி வசனம் எழுதியுள்ளனர். எடிட்டிங் மதன், கலை இயக்கம் ராஜ்கமல், ஸ்டண்ட் பீனிக்ஸ் பிரபு, எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் ரஞ்சித் கருணாகரன் ஆகியோர், தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகின்றனர்.
No comments:
Note: Only a member of this blog may post a comment.