Facebook

test

Tourist Family Movie Review | Tamil

 டூரிஸ்ட் ஃபேமிலி விமர்சனம்  :  


இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிழைப்பதற்காக  குடும்பத்துடன் படகில் ராமேஸ்வரத்திற்கு வருகிறார்கள்,  தாஸ் (சசிக்குமார்), அவரது மனைவி வசந்தி (சிம்ரன்), இரு மகன்கள் (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) குடும்பத்தினர், அங்கு தமிழக கடலோர காவல் படையிடம் மாட்டிக் கொள்கிறார்கள், அந்த போலீசார் இவர்களின் நிலையறிந்து  அவர்களை ஒன்றும் செய்யாமல் விட , வசந்தி (சிம்ரன்) தனது தம்பி யோகிபாபு உதவியுடன் , சென்னை வந்து ஓர் காலணியில் தாங்கள் கேரளாவில் இருந்து வருகிறோம் என்று தங்குகிறார்கள் , பின் அங்கு சுற்றி வாழ்பவர்களுடன் பழகி , டிரைவர் வேலை  செய்து குடும்பத்தினை நடத்துகிறார் சசிகுமார், மகிழ்ச்சியாக செல்ல தொடங்கும் அவர்களது வாழ்வில் , இராமேஸ்வரத்தில் நடை பெறும் ஓர் குண்டு வெடிப்பில் போலீஸ் சசிகுமார் குடும்பத்தை சந்தேகம் கொள்கிறது ,  இவர்களை தேடி போலீஸ் சென்னை வர , இவர்கள் வாழ்க்கை  என்ன ஆனது என்பதே படத்தின் கதைக்களம் .

சசிகுமார் - குடும்பத்தை காப்பாற்ற காட்டும்  தவிப்பு , இயல்பாக உதவும் குணம், சக மனிதர்களிடம் காட்டும் அன்பு  என தேர்ந்த நடிப்பை கொடுத்து இருக்கிறார் , அவரது மனைவியாக வரும் சிம்ரன் , உறுதுணையான மிகையில்லா நடிப்பிலும், மகன்களாக வரும் மிதுன் ஜெய் சங்கர் அந்த வயதிற்குரிய இயல்பான நடிப்பிலும் , கமலேஷின்  அதகள காமெடியிலும் கவர்கிறார்கள்.

மேலும்  யோகிபாபு , எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல், பக்ஸ் என்கிற பகவதி, ரமேஷ் திலக், ஸ்ரீஜா ரவி, ராம்குமார் பிரசன்னா  ஆகியோர் தங்களது கதா பாத்திரங்களுக்கு மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்து ரசிக்க வைக்கிறார்கள்.

அறிமுக படமா என்று வியக்கும் அளவிற்கு , இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் ,  குடும்பத்தை காப்பாற்ற புலம் பெயர்ந்து வந்து வாழும் வலியை மற்றும் மனித நேயத்தை பற்றி  இயல்பான, அழுத்தமான  மற்றும்  நகைச்சுவையுடன் கூடிய கதைக்களத்தில் கொடுத்து இருக்கிறார் ,  ஷான் ரோல்டனின் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம். அரவிந்த் விஸ்வநாதனின் கேமராவும், பரத் விக்ரமனின் படத்தொகுப்பும் கச்சிதம். 

மொத்தத்தில் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி யை குடும்பத்துடன் கண்டுகளிக்கலாம்

No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.