Facebook

test

Manikanda Movie Official Teaser | Tamil

 ‘மணிகண்டா’ படத்தின் டீசர் வெளியானது!

‘மாளிகப்புரம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில், வைபவ், ஆடுகளம் நரேன், அரவிந்த் ஆகாஷ், மீனாட்சி கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மணிகண்டா’. இப்படத்தில் ரவி மோகன், மிர்ச்சி சிவா, வெங்கட் பிரபு, கிருஷ்ணா, மஹத், பிரேம் ஜி அமரன் மற்றும் கங்கை அமரன் ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்.

ஐயப்ப சுவாமியை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு பிரேம் ஜி அமரன் இசையமைத்துள்ளார். வெங்கட் பிரபு, ஜே.கே. சரவணா மற்றும் எம். ராஜாராம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘மணிகண்டா’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.