‘ஜெடூசி’ படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியானது!
அக்ஷயா மூவி மேக்கர்ஸ் மற்றும் ஸ்ரீ இன்டர்நேஷனல் மூவிஸ் நிறுவனங்களின் சார்பில், நட்ராஜ் ஏகாம்பரம் மற்றும் விஜயசாந்தி ஸ்ரீதா தயாரிப்பில், நட்ராஜ் ஏகாம்பரம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெடூசி’. விக்னேஸ்வரன் இசையமைத்துள்ள இப்படத்தில் ஸ்ரீதர், சுவேதா, அருவி மதன், ஏ. வெங்கடேஷ், பிளாக் பாண்டி, பாவா செல்லதுரை, அசோக் பாண்டியன், ஜெயந்திமாலா, மீனாட்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விறுவிறுப்பான அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அழுத்தமான திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஜெடூசி’ திரைப்படம் வரும் நவம்பர் 27, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.