Facebook

test

Aadi Rudrra Movie

தெய்வீக மர்மங்களுடன் மிரட்ட வரும் ‘ஆதி ருத்ரா’!


நடிகர்
ஆதி சாய்குமாரின் அடுத்த படைப்பாக உருவாகி வரும் ‘ஆதி ருத்ரா’ (Aadi Rudrra) திரைப்படம், வரலாற்றின் மறைக்கப்பட்ட ரகசியங்களையும் ஆன்மீகத்தின் மர்மங்களையும் மையமாகக் கொண்ட தெய்வீக மர்மத் திரில்லராக உருவாகிறது.

இப்படத்தின் டீசர் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நவரசன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு, காந்தாரா பட இசையமைப்பாளர் பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். பிரசாந்த் ஜி. ருத்ரப்பா தயாரிப்பில், திரிசூல் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் உருவாகவுள்ளது !

பிரம்மாண்டமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி 2027 துவங்கவுள்ளது ., மேலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.  

வரலாற்றின் மர்மங்கள்… ஆன்மீகத்தின் அதிசயங்கள்… மறைந்திருக்கும் தெய்வீக சக்திகள்! ‘ஆதி ருத்ரா’ மூலம் ஒரு புதிய திரையரங்க அனுபவம் காத்திருக்கிறது! 🔱🔥



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.