Facebook

test

Yezhu Kadal Yezhu Malai Movie Trailer | Tamil

சுவாரஸ்யம் கூட்டும் இயக்குனர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ட்ரெய்லர்! :

 இயக்குநர் ராம் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

ரயில் பயணத்தின் போது தான் சந்தித்த ஒரு விசித்திரமான மனிதரைப் பற்றி சூரி தனது நண்பரிடம் கூறுவதுடன் தொடங்குகிறது ட்ரெய்லர். 8,000 ஆண்டுகளாக வாழும் சாகாவரம் பெற்ற மனிதராக நிவின் பாலியும், ஒரு சாதாரண மனிதராக சூரியும் தோன்றுகின்றனர். இவர்கள் இருவருக்குமிடையே உருவாகும் எதிர்பாராத சந்திப்பும், அதனைத் தொடர்ந்து நிகழும் பயணமுமே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது.

தனக்கே உரித்தான வித்தியாசமான கதை சொல்லும் பாணியில், நிவின் பாலி மற்றும் சூரியை மையமாக வைத்து இயக்குநர் ராம் உருவாக்கியுள்ள இந்தப் படம், ரசிகர்களை முற்றிலும் புதியதொரு உலகிற்குள் அழைத்துச் செல்லும் வகையில் உருவாகியுள்ளது.

வித்தியாசமான கதைக்களம் மற்றும் சுவாரஸ்யமான காட்சிகளுடன் வெளியாகியுள்ள ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் 2026 அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

‘ஏழு கடல் ஏழு மலை’ ட்ரெய்லர் :



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.