Facebook

test

Baththa Movie Trailer | Tamil

 விஜய் சேதுபதியின் ‘பத்தா’ – வெளியானது பரபரப்பான ட்ரெய்லர்!


ஸ்டார் ஸ்டுடியோ 18 மற்றும் இயக்குநர் அட்லியின் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம்
‘பத்தா’. சாய் அபயங்கர் இசையமைக்க, இயக்குநர் பாலாஜி தரணிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி – இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள இப்படம், 1980-களின் பின்னணியில் தந்தை – மகள் இடையேயான ஆழமான பாசத்தையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படம் வரும் 2026 அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், ‘பத்தா’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

‘பத்தா ட்ரெய்லர்’



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.