சமுத்திரக்கனியின் ‘கஸ்தூரி வீடு’ – மிரட்டும் ஃபேண்டஸி திகில் டீசர்!
லயன் வீ ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரான் டாங் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் , விஜய் ஆர். ஆனந்த் இயக்கத்தில் , கார்த்திக் ராஜா இசையில், சமுத்திரக்கனி, டேவிட் டிட்டோ, தனுஜா மதுரபந்துலா, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், தம்பி ராமையா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள "கஸ்தூரி வீடு" படம், புராண காலத்தின் மர்மங்களையும், அறிவியலின் சாத்தியங்களையும், புனைகதையின் கற்பனை உலகையும் ஒன்றாகக் கலந்து, திகில் மற்றும் மர்மம் நிறைந்த கதைக்களத்தில் உருவாகியுள்ளது .
முற்றிலும் மாறுபட்ட ஃபேண்டஸி திகில் கதைக்களத்தில் சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு இப்படத்தில் நடித்துள்ளனர் , தற்போது "கஸ்தூரி வீடு" படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டீசரில் இடம்பெறும் காட்சிகள், கஸ்தூரி வீட்டின் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன? என்ற கேள்வியை எழுப்புவதோடு, அந்த மர்மத்தை அறிந்துகொள்ளும் ஆர்வத்தையும் தூண்டுகின்றன.

No comments:
Note: Only a member of this blog may post a comment.