அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தனின் ‘அன்பில் அவன்’… மிரட்டும் ட்ரெய்லர் வெளியீடு!
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் பரபரப்பான ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
காதல், ஆக்ஷன் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு, ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ளார். அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட படங்களை தயாரித்த ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம், காதலின் மென்மையையும் ஆக்ஷனின் தீவிரத்தையும் ஒருசேரக் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.
விறுவிறுப்பான காட்சிகள், காதல், மோதல்கள் என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள ட்ரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.