Facebook

test

Dorothy Movie Trailer | Tamil

 கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டோரதி’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!


மதுரையை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டோரதி’ திரைப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. ட்ரெய்லரில் மதுரையின் பின்னணியில் நகரும் கதைக்களம், கதாபாத்திரங்களின் உணர்வுகள் மற்றும் அதிரடி ஆக்சன் காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

ஏற்கனவே டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘டோரதி’ திரைப்படம், அங்கு பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள இப்படம் வரும் 2026 செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

‘டோரதி ட்ரெய்லர் ’ :




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.