ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், நடிகரும் தமிழ்நாடு முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாகவும், ஃபரியா அப்துல்லா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகாலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் வெளியாகியுள்ள ட்ரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் வரும் 2026 அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
‘சிக்மா ட்ரெய்லர் ’ :

No comments:
Note: Only a member of this blog may post a comment.