கருணாஸ் – நிமிஷா சஜயன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ படத்தின் டிரெய்லர் வெளியானது !
‘கலாமயா சினிவெர்ஸ்’ வழங்கும், கிதேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் தயாரிப்பில், தேசிய விருது பெற்ற சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘என்ன விலை’. சாம் சி.எஸ். இசையமைத்துள்ள இப்படத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இவர்களுடன் விஜயலட்சுமி வீரமணி, கமலேஷ் ஜெகன், சேத்தன் சீனு, மோகன் ராமன், பூர்ணிமா பாக்யராஜ், தீபா சங்கர், டி.எஸ்.ஆர். சீனிவாசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சமூக–அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தக் குடும்பத் திரில்லர் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. நீதிமன்றப் பின்னணியில் விறுவிறுப்பான கேள்வியை முன்வைக்கும் டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
கருணாஸ் – நிமிஷா சஜயன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘என்ன விலை’, செப்டம்பர் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.