விஜய் சேதுபதி 56-வது படம் ‘பத்தா’... ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!
விஜய் சேதுபதி நடிக்கும் 56-வது படத்திற்கு ‘பத்தா’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் , சீதக்காதி ’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்குகிறார். இந்த இயக்குனரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் மூன்றாவது படமாகும்
அட்லி தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
‘பத்தா’ திரைப்படம் வரும் 2026-ம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"பத்தா" படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ்

No comments:
Note: Only a member of this blog may post a comment.