ரியோ – வர்த்திகா நடிக்கும் ‘ராம் இன் லீலா’... ட்ரெய்லர் வெளியானது!
ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் ரியோ, வர்த்திகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராம் இன் லீலா’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
காதல், நகைச்சுவை மற்றும் இளமைத் துள்ளல் நிறைந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ரியோ மற்றும் வர்த்திகா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இருவரையும் மையமாகக் கொண்டு நகரும் கதையில், காதலைச் சுற்றி உருவாகும் எதிர்பாராத சம்பவங்களும், உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களும் முக்கிய இடம் பிடித்துள்ளன.
ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, ரியோவின் கதாபாத்திரமும், வர்த்திகாவுடனான அவரது கெமிஸ்ட்ரியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
‘ராம் இன் லீலா’ திரைப்படம் வரும் 2026ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது .
‘ராம் இன் லீலா’ ட்ரெய்லர் :
No comments:
Note: Only a member of this blog may post a comment.