திருமண வாழ்க்கையில் இப்படியொரு ட்விஸ்டா? ‘பியார் பிரேமா கல்யாணம்’ ட்ரெய்லர் வெளியீடு!
பியார் பிரேமா காதல், ஸ்டார் ஆகிய படங்களை இயக்கிய இளன், அடுத்ததாக ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தை இயக்கி, அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இப்படத்தில் சான்வீ மேக்னா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், கீதா கைலாசம், இளங்கோ குமரவேல், செந்தில் மாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் திரையரங்க வெளியீட்டைத் தவிர்த்து, நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
திருமணத்துக்குப் பிறகும் பெற்றோர் வீட்டை விட்டு வெளியேற மறுக்கிறார் நாயகி சான்வீ. இதனால், அவரது கணவரான இளன், மனைவியின் வீட்டுக்கே குடிபெயர வேண்டிய சூழல் உருவாகிறது. இதன் பின்னர் அந்த வீட்டில் அரங்கேறும் குடும்பக் கலாட்டாக்கள், கலாசார மோதல்கள், உறவுச் சிக்கல்கள் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள்தான் இப்படத்தின் மையக்கதை.
இந்நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில், படக்குழு தற்போது ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது. குடும்ப உறவுகளையும், திருமணத்துக்குப் பிறகான சிக்கல்களையும் நகைச்சுவையுடன் உணர்வுப்பூர்வமாகக் காட்சிப்படுத்தும் விதத்தில் ட்ரெய்லர் அமைந்துள்ளது.
‘பியார் பிரேமா கல்யாணம்’ ட்ரெய்லர் :

No comments:
Note: Only a member of this blog may post a comment.