Facebook

test

Toxic Movie Tamil Trailer

 ‘டாக்ஸிக்’ ட்ரெய்லர் ரிலீஸ் – மிரட்டும் யாஷ்!  

ஜீத்து மோகன்தாஸ் இயக்கத்தில், நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் யாஷுடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ஜன நாயகன்’ படத்தைத் தயாரித்த கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளன.

இருவேறு கதாபாத்திரங்களில் யாஷ், முன்னணி நடிகைகளின் கதாபாத்திரங்கள், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான சென்டிமென்ட் காட்சிகள் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் ‘டாக்ஸிக்’ படத்தின் ட்ரெய்லர் அமைந்துள்ளது.

ராஜீவ் ரவியின் மிரட்டலான ஒளிப்பதிவு, ரவி பஸ்ரூரின் அதிரடி பின்னணி இசை மற்றும் ஜீத்து மோகன்தாஸின் விறுவிறுப்பான இயக்கம் ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘டாக்ஸிக்’ படத்தின் தமிழ் ட்ரெய்லர் :



No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.