ஹீரோவாகும் இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித்!
தமிழ் சினிமாவின் பிரமாண்ட படைப்பாளரான இயக்குநர் ஷங்கரின் குடும்பத்தில் இருந்து இன்னொரு நட்சத்திரம் வெள்ளித்திரையை நோக்கி அடியெடுத்து வைக்கிறார். ஏற்கனவே மாவீரன், விருமன் போன்ற படங்களில் நாயகியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவரது மகள் அதிதி ஷங்கரைத் தொடர்ந்து, தற்போது அவரது மகன் அர்ஜித் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
"லவ்வர் பாய்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய திரைப்படத்தில், அர்ஜித்துக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இயக்குநர் அட்லியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அசோக்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் வெங்கட் கே. நாராயணாவின் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கின்றன.
சென்னையில் நடைபெற்ற படத்தின் தொடக்க விழா கோலாகலமாக அமைந்தது. இந்த நிகழ்வில் இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், ஹெச். வினோத், அபிஷன் ஜீவிந்த், தயாரிப்பாளர்கள் லலித் குமார், பைவ்ஸ்டார் செந்தில் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும், நடிகை அதிதி ஷங்கரின் வருகையும் விழாவுக்கு கூடுதல் சிறப்பை சேர்த்தது.
வெள்ளித்திரையில் புதிய ஹீரோவாக அர்ஜித் களமிறங்கும் இந்த அறிவிப்பு, தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏற்கனவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
No comments:
Note: Only a member of this blog may post a comment.