மீண்டும் ஜீவா - யுவன் - ராஜேஷ் கூட்டணியில் " ஜாலியா இருந்த ஒருத்தன் பட டீசர் வெளியீடு!
"சிவா மனசுல சக்தி படத்திற்கு பிறகு, மீண்டும் ஒரு முறை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் இயக்குநர் ராஜேஷ் எம் கூட்டணியில் நடிகர் ஜீவா இணைந்துள்ளார்.
"ஜாலியா இருந்த ஒருத்தன்" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய படத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக இவனா நடித்துள்ளார். மேலும், யூடியூப் மூலம் பிரபலமான சுதாகர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
நகைச்சுவை, காதல் மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ஜீவாவின் பழைய கலகலப்பான நடிப்பையும், ராஜேஷ் எம்-யின் தனித்துவமான காமெடி பாணியையும் மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
🔥 தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வரும் "ஜாலியா இருந்த ஒருத்தன்" டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.