பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள ‘நாகபந்தம்’ டிரெய்லர் (தமிழ் )!"
புராணங்களின் மர்ம உலகை உயிர்ப்பிக்கும் பிரம்மாண்ட படைப்பாக உருவாகி வரும் "நாகபந்தம்" திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
புராண காலத்து பின்னணியில், நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடைபெறும் மாபெரும் போராட்டத்தை, ஆன்மிகம், பாண்டஸி மற்றும் திரில்லர் அம்சங்களுடன் காட்சிப்படுத்தும் இந்த படம், கற்பனைக்கும் நிஜத்திற்கும் இடையே ஒரு புதிய உலகத்தை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ‘நாகபந்தம்’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தை அதிரவைத்துள்ளது. கண்கவர் காட்சிகள், பிரம்மாண்ட விஷுவல்கள் மற்றும் மர்மம் நிறைந்த கதைக்களம் ஆகியவை டிரெய்லரின் முக்கிய பலமாக அமைந்துள்ளன.
புராண சக்திகளின் ரகசியங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் இந்த பிரம்மாண்ட காவியம், 2026 ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.