Facebook

test

Rajinikanth in Dharman Movie Posters

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'தர்மன்' பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு! :


அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு "தர்மன்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினிகாந்துடன் ராஷி கண்ணா, சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

மருத்துவர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் இப்படம், அதிரடி அம்சங்களுடன் குடும்ப உணர்வுகளையும் மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், படத்தின் படப்பிடிப்பும் இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏற்கனவே வெளியான ஓ மை கடவுளே மற்றும் டிராகன் திரைப்படங்கள், விமர்சன ரீதியிலும் வணிக ரீதியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிப் படங்களாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

"சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்மன் படத்தின் போஸ்டர்ஸ்"  :




No comments:

Note: Only a member of this blog may post a comment.

Powered by Blogger.