'சிவி' இயக்குநரின் அடுத்த படைப்பு – 'லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி' பூஜையுடன் தொடக்கம் :
'சிவி' படத்தின் இயக்குநர் கே.ஆர். செந்தில் குமார், அடுத்ததாக ஸ்போர்ட்ஸ் டிராமா கதைக்களத்தில் உருவாகும் புதிய படத்தை இயக்கவுள்ளார். "லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி" எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில் யாஷிகா ஆனந்த், ரச்சிதா மகாலட்சுமி, அமித் பார்கவ், ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.எம். மதுவந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். காவியா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து S2 Movies நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜூன் 26, 2026) பூஜையுடன் இனிதே தொடங்கியது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.