ஐஸ்வர்யா ராஜேஷின் ‘ஓ சுகுமாரி’ டீசர் வெளியீடு!
கங்கா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மஹேஸ்வர் ரெட்டி மூலி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘ஓ சுகுமாரி’. அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, கதாநாயகனாக வீர் நடித்துள்ளார்.
இவர்களுடன் ஜான்சி, விஷ்ணு ஓ லட்டு, ஆமணி, முரளிதர், ஆனந்த், அஞ்சிமாமா, சிவானந்த், கோட்டா ஜெயராம், கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிராமத்து பின்னணியில், வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்தப் படம் உணர்வுப்பூர்வமான குடும்பக் கதையையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் இணைத்து சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ளதாக தெரிகிறது.
படத்திற்கு சி.ஹெச். குஷேந்தர் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், பரத் மஞ்சிராஜு இசையமைத்துள்ளார்.
மேலும், ‘ஓ சுகுமாரி’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது. டீசர் வெளியீட்டின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.