அஜய் கார்த்தி அறிமுகமாகும் “டார்க்” – எதிர்பார்ப்பை எகிறவைக்கும் ட்ரைலர்!:
MG Studios சார்பில் தயாரிப்பாளர் APV. மாறன் மற்றும் Five Star நிறுவனம் சார்பில் செந்தில் இணைந்து தயாரித்துள்ள நிலையில், டாடா திரைப்படத்தின் வெற்றிப் புகழ் இயக்குநர் கணேஷ் K. பாபு கதை எழுதி தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் “டார்க்”. இயக்குநர் கல்யாண் K. ஜெகன் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலரை படக்குழு தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் வகையில் வெளியிட்டுள்ளது.
இப்படத்தின் மூலம் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிகர் நேத்திரனின் மகள் அஞ்சனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், நட்டி நட்ராஜ் மற்றும் இயக்குநர்-நடிகர் கே. பாக்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். இவர்களுடன் VTV கணேஷ், இந்துமதி, சிபி ஜெயக்குமார், அரவிந்த் ஜானகிராமன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மர்மம், பரபரப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள “டார்க்”, படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Note: Only a member of this blog may post a comment.